ADDED : ஏப் 12, 2025 10:11 PM

கடலுார் : கடலுார் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் குற்ற தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசுகையில், 'மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகள், தொடர் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
போதைப் பொருட்கள், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை முற்றிலுமாக தடுக்க வேண்டும். தொடர் குற்ற செயலில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
சோதனை சாவடிகளில் புதுச்சேரி மதுபானம் வருவதை தடுக்க வேண்டும்' என்றார்.கூட்டத்தில் போலீஸ் நிலையங்களில் நடந்த குற்ற சம்பவங்கள், குற்றவாளிகள் கைது, குற்றம் தடுப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் நல்லதுரை, ரகுபதி மற்றும் அனைத்து டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் பங்கேற்றனர்.

