ADDED : மார் 29, 2026 10:31 PM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் அருகே குளம் அருகே இருந்த முதலையை வனத்தறையினர் பிடித்தனர்.
சிதம்பரம் அடுத்தள்ள நாஞ்சலுார் கிராமத்தில் முள்ளுக்குட்டை மீன் குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தை அப்பகுதி மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை குளத்தின் அருகில் முதலை ஒன்று இருந்ததாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனச்சரக அலுவலர் சத்தியவேல் தலைமையில், வனக் காப்பாளர்கள் ராம்குமார், அன்புமணி , அமுத பிரியன் மற்றும் பாண்டியன் ஆகியோர் முதலை இருந்த பகுதிக்கு விரைந்து சென்று, 5 அடி 40 கிலோ எடையுள்ள முதலையை மீட்டு, வக்கராமரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.
