/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்களை அச்சுறுத்திய முதலை பிடிபட்டது
/
மக்களை அச்சுறுத்திய முதலை பிடிபட்டது
ADDED : டிச 06, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அருகே, கோவில் குளத்தில் மக்களை அச்சுறுத்திய முதலையை வனத்துறையைினர் பிடித்து வக்காரமாரி குளத்தில் விட்டனர்.
சிதம்பரம் அடுத்த மெய்யாத்தார் கிராமத்தில் உள்ள கோவில் குளத்தில் முதலை இருப்பதை நேற்று அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் சிதம்பரம் வனவர் பன்னீர்செல்வம் தலைமையில், வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர் மற்றும்முதலை பிடி குழுவினர் விரைந்து சென்று, குளத்தில் இருந்த முதலையை வலை வீசி 4 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடித்தனர்.பிடிபட்ட முதலை 8 அடி நீளம், 70 கிலோ எடை இருந்தது. அந்த முதலை பாதுகாப்பாக எடுத்து சென்று, வக்காரமாரி ஏரியில் விட்டனர்.