/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம்
/
பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம்
ADDED : நவ 29, 2024 04:30 AM

புதுச்சத்திரம்: பரங்கிப்பேட்டை வேளாண் துறை சார்பில் பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சம்பா சாகுபடிக்கு நெல் பயிர் செய்துள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு செய்வதற்கு 30 ம் தேதி கடைசி நாளாகும்.
அதையொட்டி பரங்கிப்பேட்டை வேளாண் துறை சார்பில், விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம் புதுச்சத்திரத்தில் நடந்தது.
முகாமிற்கு பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் நந்தினி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெயக்குமார் பங்கேற்று, விவசாயிகளிடம் பயிர் காப்பீடு குறித்து, துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் துணை வேளாண் அலுவலர் சிவசங்கர், உதவி வேளாண் அலுவலர்கள் பிரபு மணிவாசகம் உள்ளிட்ட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

