sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வௌ்ளப்பெருக்கால் பயிர்கள் பாதிப்பு... 3,17,000 லட்சம் ஏக்கர்; 234 ஹெக்டேர் நிலங்கள் மண்மேடானது

/

வௌ்ளப்பெருக்கால் பயிர்கள் பாதிப்பு... 3,17,000 லட்சம் ஏக்கர்; 234 ஹெக்டேர் நிலங்கள் மண்மேடானது

வௌ்ளப்பெருக்கால் பயிர்கள் பாதிப்பு... 3,17,000 லட்சம் ஏக்கர்; 234 ஹெக்டேர் நிலங்கள் மண்மேடானது

வௌ்ளப்பெருக்கால் பயிர்கள் பாதிப்பு... 3,17,000 லட்சம் ஏக்கர்; 234 ஹெக்டேர் நிலங்கள் மண்மேடானது


ADDED : டிச 23, 2024 04:25 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தென் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக 3,17,000 ஏக்கர் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கடந்த 30ம் தேதி பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கடந்த போது எதிர்பாராத விதமாக கனமழை கொட்டித்தீர்த்தது. வரலாறு காணாத இந்த மழையால் புதுச்சேரி 50செ.மீ.,, கடலுார் 25 செ.மீ., மைலம் 50, திண்டிவனம் 50 திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்தன. கடலை விட்டு புயல் கடந்த பின்னர் நிலப்பகுதியில் நிலை கொண்டிருந்ததால் அதிகளவு மழையை கொடுத்தது.

இதனால் 150 கிராமங்களில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்டன. தென் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணா அணைகட்டு நிரம்பி திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணைக்கட்டிற்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதில் சாத்தனுார் அணைக்கட்டின் கொள்ளளவு 7.3 டி.எம்.சி., யாகும். இதனால் 30 ம் தேதி இரவே சாத்தனுார் அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி திறந்துவிடப்பட்டது.

1108 கரைகள் உடைப்பு:


துவக்கத்தில் 6 ஆயிரம் கனஅடியாக திறந்து விடப்பட்ட நீரின் அளவு படிப்படியாக உயர்ந்தது. 1ம் தேதி 1.70 லட்சம், 2.20 லட்சம், 2.40லட்சம் கனஅடியாக உயர்ந்தது. வரும் வழிதோறும் உள்ள மழைநீர் பெண்ணையாற்றில் கலந்ததால் 2.70லட்சம் கனஅடி தண்ணீர் இரு கரைதொட்டு சீறி பாய்ந்தது. இதில் குளங்கள், கால்வாய்கள், மொத்தம் 1108 கரைகள் உடைப்பு எடுத்தது.

கடலுார் வடிகால் மாவட்டம் என்பதால் அவ்வளவு தண்ணீரையும் கடலில் உள்வாங்கவில்லை. மாறாக பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள மணல் திட்டு, கடலலை சீற்றம், ைஹட்டைடு ஆகியவற்றால் தண்ணீர் கடலுக்குள் உள்வாங்குவதில் பெரும் பிரச்னை ஏற்பட்டது.

இதன்காரணமாக கரை உடைப்பு ஏற்பட்டு நிலத்தில் மண் மேடிட்டுள்ளது. நிலக்கடலை போன்ற பயிர்கள் வெள்ளத்தில் அழுகி சேதமடைந்தன. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் வெள்ளத்தில் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணியை துவக்கியது.

கணக்கெடுக்கும் பணி:


கிராமங்களில் உள்ள வி.ஏ.ஓ., வேளாண் அலுவலர் இணைந்து கணக்கெடுப்பு பணியை நடத்தியதாக கூறப்பட்டது. அதில் 1,86,750 ஏக்கர் நெல், 57,500 ஏக்கர் சிறுதானியம், 29,750 ஏக்கர் பயறுவகைகள், 4,900 ஏக்கர் கரும்பு, 11,875 ஏக்கர் எண்ணெய் வித்து பயிர்கள், காய்கறி மற்றும் பழங்கள் 20,750 ஏக்கர் ஆக மொத்தம் 3,17,500 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் நாசமாகி இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மண் மேடிட்ட கிராமங்கள்:


வெள்ளம் காரணமாக நாணமேடு, கண்டக்காடு, தாழங்குடா, சுபாஉப்பலவாடி, அழகியநத்தம், பகண்டை, மேல்பட்டாம்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்களில் மண்மேடிட்டுள்ளது. அண்மையில் கணக்கெடுப்பு நடத்தியதில் 585 ஏக்கர் நிலங்களில் மண்மேடிட்டுள்ளது.

விவசாய நிலங்களில் மண்மேட்டை அகற்றுவதா அல்லது, நிவாரணம் கொடுப்பதா என அரசு ஆலோசனை செய்து வருகிறது.






      Dinamalar
      Follow us