/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் பஸ் ஸ்டாண்டில் குவிந்த கூட்டம்
/
கடலுார் பஸ் ஸ்டாண்டில் குவிந்த கூட்டம்
ADDED : ஜன 05, 2026 04:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: புத்தாண்டு விடுமுறை முடிந்து பணி இடங்களுக்கு செல்ல கடலுார் பஸ் ஸ்டாண்டில் பயணியங்கள் குவிந்தனர்.
டிசம்பர் மாதம் இறுதி வாரம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக வந்ததால் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனால் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் வேலைபார்ப்போர் விடுமுறை முடிந்து பணி இடங்களுக்கு நேற்று திரும்பினர்.
அதனால் நேற்று மாலை கடலுார் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சென்னை, திருச்சி, பெங்களூர் போன்ற பெரிய நகரங்களுக்கு செல்லுபவர்கள், கல்லுாரி மாணவர்கள், சென்னை, வேலுார், நாமக்கல் போன்ற நகரங்களுக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்து பஸ் ஏறி சென்றனர்.

