/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில்களில் 'குறி' கேட்க கூட்டம் குவிகிறது உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தம்
/
கோவில்களில் 'குறி' கேட்க கூட்டம் குவிகிறது உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தம்
கோவில்களில் 'குறி' கேட்க கூட்டம் குவிகிறது உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தம்
கோவில்களில் 'குறி' கேட்க கூட்டம் குவிகிறது உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தம்
ADDED : பிப் 05, 2025 06:17 AM
லோக்சபா மற்றும் சட்டபை தேர்தலை விட, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கும்போதுதான் கிராமங்கள் தோறும் தேர்தல் திருவிழா களைகட்டும். அதிலும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலரை விட 'செக்' பவர் உள்ள ஊராட்சி தலைவர்கள் பதவிக்குத்தான் போட்டி அதிகம் இருக்கும்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்த நிலையில், மறுசீரமைப்பு பணிகள் முடிந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதனால் தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதால், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பலரும் ஆயத்தமாகி வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடலாமா, வெற்றி கிடைக்குமா, வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பிரபல ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர்.
அத்துடன், கோவில்களில் குறி கேட்கவும், குல தெய்வ கோவிலுக்கு சென்று உத்தரவு கேட்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடலுார் மாவட்டத்தை சேர்ந்த பலரும் கொல்லிமலை, கேரள ஜோதிடர்களிடம் பிரசன்னம் கேட்க படையெடுத்து வருகின்றனர்.
மங்களூர், நல்லுார் ஒன்றியங்களில் பிரபல கோவில்களான பொயனப்பாடி ஆண்டவர் கோவில், சிறுபாக்கம் ஆண்டவர் கோவில், பெருமுளை முத்தையா கோவில், குமாரை பூமாலையப்பர் கோவில், கூகையூர் வீரபயங்கரம் ஐயனார் கோவில், நெய்வாசல் பூமாலையப்பர் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் குறிகேட்க சுற்றுபுற பகுதிகளை சேர்ந்தவர்கள் குவிந்து வருகின்றனர்.