sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் சிறையில் ரகளை: 3 கைதிகள் மீது வழக்கு பதிவு

/

கடலுார் சிறையில் ரகளை: 3 கைதிகள் மீது வழக்கு பதிவு

கடலுார் சிறையில் ரகளை: 3 கைதிகள் மீது வழக்கு பதிவு

கடலுார் சிறையில் ரகளை: 3 கைதிகள் மீது வழக்கு பதிவு


ADDED : பிப் 23, 2024 12:22 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மத்திய சிறையில் காவலர்களிடம் தகராறு செய்த மூன்று கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடலுார் மத்திய சிறை காவலர்கள் வாசு, வாஞ்சிநாதன், மகேந்திரன் ஆகியோர் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு இணைப்பு சிறை அறை எண் 3ல் கைதிகளை உட்கார வைத்து கணக்கு எடுத்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த கைதிகள் தோட்டா சேகர் மகன்கள் பாலாஜி,27; அழகுராஜா,25; வெங்கடேசவரலு மகன் விஷ்ணு, 23; ஆகியோர் உட்காராமல் நின்றனர்.

அவர்களை காவலர்கள் கீழே உட்கார கூறியதற்கு, மூவரும் உட்கார முடியாது எனக் கூறி, சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு தற்கொலை செய்துக் கொள்வதாக மிரட்டினர்.

இதுகுறித்து சிறை அலுவலர் ரவி,58; அளித்த புகாரின் பேரில் கைதிகள் பாலாஜி, அழகுராஜா, விஷ்ணு ஆகியோர் மீது கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us