/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய மல்லர் கம்பத்தில் கடலுார் மாணவர் சாதனை
/
தேசிய மல்லர் கம்பத்தில் கடலுார் மாணவர் சாதனை
ADDED : ஜன 02, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் மல்லர் கம்ப பயிற்சி மைய மாணவர் தேசிய அளவிலான போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.
மத்திய பிரதேச மாநிலம், உஞ்ஜைனில் பள்ளிகளுக்கு இடையே 68 வது தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டி நடந்தது. இப்போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் கடலுார் அண்ணா விளையாட்டரங்கின் மல்லர் கம்ப பயிற்சி மையத்தின் மாணவர் யஷ்வந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவரை மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், மாவட்ட மல்லர் கம்ப கழகத் தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் அசோகன், செயலாளர் கார்த்திக், பொருளாளர் மணிபாலன், இணைச் செயலாளர் பாபு, பயிற்றுநர்கள் புருஷோத்தமன், கோபிநாத், கிரிஜா வாழ்த்தினர்.

