ADDED : ஏப் 10, 2026 04:08 AM

கடலுார்: கடலுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத் நேற்று மாநகராட்சி பகுதியில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பாதிரிப்புலியூர், சூரப்பநாயக்கன்சாவடி, இ.பி., காலனி, செல்லங்குப்பம், ஏணிக்காரன்தோட்டம், அருண் நகர், சொர்ணபுரி நகர் லஷ்மி நகர், சாலக்கரை மெயின்ரோடு, சிவானந்தபுரம், ராமநாதன் நகர், வள்ளி நகர், கடலுார் முதுநகர், வசந்திரான்பாளையம், பனங்காட்டு காலனி, சுனாமி நகர், இருசப்பன் நகர், வீரப்பன் தெரு, ஜெயின் தெ ரு, சலங்கை நகர், மாந்தோப்பு, சின்னப்பன் தெரு, ராமராஜன் தெரு, விநாயகர் கோவில்தெரு, கொடிக்கால்குப்பம், மணியன் சுப்புராயன்தெரு, பழமலை தெரு, சுப்ரமணி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் சம்பத் தீவிர ஓட்டு சேகரித்தார்.
அவருடன் அவைத்தலைவர் குமார், டாக்டர் சீனிவாசராஜா, வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்கம் பாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
