/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அக் ஷரா வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி சாதனை
/
கடலுார் அக் ஷரா வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி சாதனை
கடலுார் அக் ஷரா வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி சாதனை
கடலுார் அக் ஷரா வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி சாதனை
ADDED : மே 22, 2025 11:35 PM

கடலுார்: கடலுார் அக் ஷரா வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
கடலுார் அக் ஷரா வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் மாணவி ப்ரிஷா அதிதி முருகன், விஜயவாணி, சுந்தரகிருஷ்ணன் சிறந்த மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
10ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் நர்த்தனா, சண்முகப்ரியா, ரிதுவர்ஷினி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் பவித்ரா ரமணிசங்கர், நிறுவனர் விஜயலட்சுமி, முதல்வர் பிரியதர்ஷினி, துணை முதல்வர் வெங்கடேஷ் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.