/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் சி.கே., சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி
/
கடலுார் சி.கே., சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி
கடலுார் சி.கே., சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி
கடலுார் சி.கே., சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 14, 2025 11:43 PM

கடலுார்: கடலுார் சி.கே., சி.பி.எஸ்.இ., பள்ளி பத்தாம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் சி.பி.எஸ்.இ., தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
கடலுார் சி.கே., சி.பி.எஸ்.இ., பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியானது. இதில் சி.கே., சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று நுாறு சதவீதம் தேர்ச்சி அடைந்தனர்.
பிளஸ் 2 வில் மாணவர் அனுஷ் 90சதவீத மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவர் தருண்குமார் 87 சதவீத மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மாணவர் ஜோஸ் ஆண்டனி 84சதவீத மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர்.
பத்தாம் வகுப்பில் மாணவி நர்மதா 95சதவீத மதிப்பெண் பெற்று முதலிடத்திலும், மாணவர் கிறிஸ்டஸ் தாம்ஸ் சிமியோன் 89சதவீத மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மாணவி ஸ்வேதா ஸ்ரீ 86சதவீத மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளி நிர்வாக இயக்குனர் அமுதவல்லி ரங்கநாதன், பள்ளி முதல்வர் சுதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.