/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கடலுார் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ADDED : டிச 22, 2024 09:27 AM

கடலுார் : சேத்தியாதோப்பு வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரித் நடவடிக்கை எடுக்க கோரி, கடலுார் கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், சேத்தியாதோப்பு அடுத்த கரிவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் அருள்பாண்டியன், 24. என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி.
இவர், கடந்த 14ம் தேதி நண்பர்கள் மணிகண்டன், சுபாஷ் ஆகியோருடன் பைக்கில் விருத்தாசலம் சென்றவர், 17ம் தேதி, விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் இறந்து கிடந்தார்.
இந்நிலையில், அருள்பாண்டியன் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி, உறவினர்கள் நேற்று முன்தினம் மதியம் சேத்தியாதோப்பில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று மதியம் 12:30மணியளவில் அருள்பாண்டியனின் தாய் லட்சுமி, 42, மற்றும் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலம் முன் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, 5 பேர் மட்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதியளித்தனர்.
கலெக்டரை சந்தித்து மனுவைக் கொடுத்த உறவினர்கள், அருள்பாண்டியனின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.