/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்ட அரசு கல்லுாரி பேராசிரியர்கள் போராட்டம்
/
கடலுார் மாவட்ட அரசு கல்லுாரி பேராசிரியர்கள் போராட்டம்
கடலுார் மாவட்ட அரசு கல்லுாரி பேராசிரியர்கள் போராட்டம்
கடலுார் மாவட்ட அரசு கல்லுாரி பேராசிரியர்கள் போராட்டம்
ADDED : ஆக 07, 2025 02:32 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லுாரி பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் பெரியார் அரசு கல்லுாரியில் நடந்த போராட்டத்திற்கு
கிளை தலைவர் திலக்குமார் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சேதுராமன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
இணை செயலாளர் ராஜலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஹென்றி, பாவாடை, வேணி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஓய்வுபெறும் வயதை 65ஆக உயர்த்த வேண்டும். பழை ஓய்வூதிய முறை அமல்படுத்தவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இணை செயலாளர் முனைவர் ராஜலட்சுமி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் ஹென்றி, பாவாடை, வேணி உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கிள்ளை பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி நேற்று சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரி முன்பு கருப்பு அட்டை அணிந்த நடந்த போராட்டத்திற்கு
தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக கிளை தலைவர் ரவி தலைமையில் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
விருத்தாசலம் போராட்டத்திற்கு, கிளை தலைவர் சுந்தரசெல்வன் தலைமை தாங்கினார்.
செயலர் முருகேசன், பொதுகுழு உறுப்பினர் கருணாநிதி, சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் ெஹலன் ரூத் ஜாய்ஸ் வரவேற்றார்.
இதில், உறுப்பினர்கள் ஆனந்தன், பிரியதர்ஷினி, அருள்வாணி, புவனேஷ்வரி, செந்தில்குமார், ஆனந்த கனக ஜோதி, பிரேமலதா மற்றும் பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.