/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்ட ஓட்டல்கள் சங்கம் மாநகராட்சி கமிஷனரிடம் மனு
/
கடலுார் மாவட்ட ஓட்டல்கள் சங்கம் மாநகராட்சி கமிஷனரிடம் மனு
கடலுார் மாவட்ட ஓட்டல்கள் சங்கம் மாநகராட்சி கமிஷனரிடம் மனு
கடலுார் மாவட்ட ஓட்டல்கள் சங்கம் மாநகராட்சி கமிஷனரிடம் மனு
ADDED : அக் 26, 2024 06:40 AM

கடலுார்,: திடக்கழிவு மேலாண்மை சேவை வரி உயர்த்தியது தொடர்பாக, கடலுார் மாநகராட்சி கமிஷனர் அனுவிடம், ஓட்டல் உரிமையாளர்கள் மனு கொடுத்தனர்.
கடலுார் மாவட்ட ஓட்டல்கள் சங்கம் சார்பில் ஆனந்தபவன் உரிமையாளர் ராம்கி நாராயணன் கொடுத்துள்ள மனு;
கடலுார் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை சேவை வரி 2017 முதல் செலுத்த வேண்டும் என, 2023-24ம் நிதியாண்டில் நோட்டீஸ் அனுப்பினர். 2017ம் ஆண்டு முதல் 2024 வரை, அனைவரும் திடக்கழிவு மேலாண்மை வரி செலுத்தி இருக்கிறோம். ஆனால், மீண்டும் 2017 முதல் 2025 நடப்பு ஆண்டு வரை நாளொன்றிற்கு 500 வீதம் உயர்த்தி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பழைய திடக்கழிவு மேலாண்மை சேவை வரி 120 ரூபாய் முதல் அதிகபட்சம் 1,000 ரூபாய் வரை மாதம் ஒன்றிற்கு வசூலிக்கப்பட்டது. தற்போது நீங்கள் நடைமுறைப்படுத்தும் சேவை வரி சிற்றுண்டி, நடுத்தர மற்றும் பெரிய ஓட்டல்கள் என பிரித்து வரி நிர்ணயம் செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும்.
கடலுார் மாநகராட்சியில் 5 நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் உயர்தர ஓட்டல்கள் எதுவும் இல்லை. கடந்தாண்டு முதல் மாநகராட்சி வரி இருமடங்காகவும், மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவு சார்ந்த அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. எனவே, எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து முன் தேதியிட்ட கூடுதல் வரியையும், புதியதாக நடைமுறைப்படுத்த உள்ள வரி முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.