ADDED : ஜூலை 27, 2011 11:11 PM
கடலூர் : கடலூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்தது.தலைவராக ஜனார்த்தனம், செயலராக குணசேகரன் மற்றும் நிர்வாக குழுவினர் பதவியேற்றனர்.அதனைத் தொடர்ந்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சிதம்பரம் அபிராமி, கடலூர் முதுநகர் பிரியா, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த கன்னித்தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர் ஜான்சன் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.மேலும், பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் 2ம் இடத்தை பிடித்த மாணவி பிரியாவின் உயர்கல்விக்கு நான்கு ஆண்டுக்கான உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.தமிழருவி மணியன், முன்னாள் ஆளுனர் ஜெயச்சந்திரன், துணை ஆளுனர் நடராஜன் உள்ளிட்டோர் வாழ்த்திப்பேசினர்.