/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்விரோத தகராறில் வி.சி., பிரமுகர் கொலை
/
முன்விரோத தகராறில் வி.சி., பிரமுகர் கொலை
ADDED : ஆக 07, 2011 01:43 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே முன்விரோத தகராறில் வி.சி., கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.சேத்தியாத்தோப்பை அடுத்த முடிகண்டநல்லூரைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் உதயகுமார், 35; வி.சி., கட்சியின் தொழிலாளர் முன்னணி மாவட்ட துணைச் செயலர்.இதே ஊரை சேர்ந்தவர் முடிகொண்டான் என்கிற செந்தில்குமார்.
ஊராட்சி தலைவர். வி.சி., கட்சியின் மாநில ஊடக மைய செயலர்.கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது. இதனால் கிராமத்திலும் கட்சியிலும் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முடிகொண்டான் என்கிற செந்தில்குமார் வீட்டிற்குச் சென்று அவரை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு சாந்தி நகர் மணல் குவாரி அருகே முடிகொண்டான் மற்றும் அவரது ஆதரவாளர்களும் உதயகுமாரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். படுகாயமடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலே இறந்தார். ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.