/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வருங்கால இந்தியா மாணவர்கள் கையில் உள்ளது : பள்ளி விழாவில் அமைச்சர் சம்பத் பேச்சு

ADDED : ஆக 28, 2011 11:07 PM
கடலூர் : ''கடலூரில் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டம் விரைவில் துவங்க உள்ளது'' என அமைச்சர் சம்பத் பேசினார்.
கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் தின விழா நடந்தது. அரசு வழக்கறிஞர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் எர்மின் இக்னேஷியஸ் முன்னிலை வகித்தார். தமிழாசிரியை கலைஜோதி வரவேற்றார். பள்ளி பாதுகாப்பாளர் சுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர். விழாவில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத் பேசியதாவது: வருங்கால இந்தியாவை தாங்கிப் பிடிக்கும் பணி மாணவிகளான உங்கள் கையில் உள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக மார்ச் மாதத்திற்குள் புனித அன்னாள் பள்ளியில் படிக்கும் 1,049 மாணவிகளுக்கு லேப் டேப் வழங்கப்படும். பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சம்பத் பேசினார். விழாவில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை ஜோஸ் மேரி நன்றி கூறினார்.