/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
59 கிலோ "மெகா' லட்டு: விநாயகருக்கு படையல்
/
59 கிலோ "மெகா' லட்டு: விநாயகருக்கு படையல்
ADDED : செப் 01, 2011 11:43 PM
கடலூர் : கடலூர் சுவிட்ஸ் கடையில் சதுர்த்தியை முன்னிட்டு, 59 கிலோ எடை மெகா சைஸ் லட்டு விநாயகருக்கு படையலிடப்பட்டது.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர், சங்கர நாயுடு தெருவில் உள்ள ஸ்ரீராம் சுவிட்ஸ் கடையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 59 கிலோ எடை மெகா சைஸ் லட்டுதயாரித்து நேற்று காலை விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து படையலிட்டனர். பின் வாடிக்கையாளர்களுக்கு லட்டுபிரசாதமாக வழங்கப்பட்டது. கடை உரிமையாளர்கள் ரமேஷ், விஜய், வினய் ஆகியோர் கூறுகையில், 'சர்க்கரை 20 கிலோ, நெய் 15 கிலோ, கடலை மாவு 15 கிலோ மற்றும் முந்திரி, பாதாம், பிஸ்தா, ஏலக்காய் ஆகியவை கொண்டு இரண்டு நாட்களில் லட்டு தயாரிக்கப்பட்டது. இப்பணியில் எட்டு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்' என்றனர்.