/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
/
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : செப் 01, 2011 11:47 PM
கடலூர் : விநாயகர் சதுர்த்தியையொட்டி கடலூரில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது.
முழு முதற் கடவுளான விநாயகர் பிறந்த நாளை விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. சதுர்த்தியன்று விநாயகருக்கு குடை சாற்றி, அருகம்புல், எறுக்கம் பூ மாலையிட்டு அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, கம்பு, கேழ்வரகு, சோளக் கதிர்கள், பழவகைகள் வைத்து தீபாராதனையிட்டு வழிபடுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் உள்ள சித்தி கணபதி, நர்த்தன கணபதி, வலம்புரி கணபதி, ஷேத்ர கணபதி, துவார கணபதி, பக்தி கணபதி, தருண கணபதி,
ஹேரம்ப கணபதி, நாக கணபதி, அம்மன் கோவிலில் உள்ள சக்தி கணபதி, விநாயகர் கோவிலில் உள்ள நவசக்தி கணபதி, சித்ர கணபதி, தலவிருட்ஷ கணபதி, புவன கணபதி, மகா கணபதி, மூஷிக கணபதி ஆகிய 16 விநாயகர்களுக்கும் காலை 8 மணிக்கு பாலபிஷேகம், நெய்வேத்தியம் செய்து, தீபாராதனை நடந்தது. மாலை உற்சவருக்கு அபிஷேக ஆராதனை, வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதே போல் வரசித்தி என்கிற விகட கபதி கோவிலில் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 21 திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை, பகல் 11 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. திருப்பாதிரிப்புலியூர் ரயிலடி பிள்ளையார் கோவில், புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவில், முதுநகர் வெள்ளிப் பிள்ளையார் கோவில், வண்டிப்பாளையம் ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவில்களில் சிறப்பு, விஜயகணபதி, பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது. இதேபோல், கடலூர், திருப்பாதிரிப்புலியூர், திருவரசன்தோட்டத்தில் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, விநாயருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மன்றத்தின் சட்ட ஆலோசகர் துரை பிரேம்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா பங்கேற்றார். சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
விருத்தாசலம்: சித்தி விநாயகர் இறைபணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த மாதம் 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்மண்டபத்தில் அமைந்துள்ள விநாயகருக்கு தினந்தோரும் அபிஷேகமும், சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு நடந்தது. பின்னர் 10 அடி உயரத்திற்கு மகாராஜா வேடம் அணியப்பட்ட விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.