ADDED : செப் 01, 2011 11:47 PM
திட்டக்குடி : ராமநத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் இறந்தான்.
ராமநத்தம் அடுத்த லக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் மணி,15. இவர் ஆவட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறையாதலால் விளையாடச் சென்றான். மாலை ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே ஊரைச்சேர்ந்த அழகப்பன் என்பவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் ஒரு ஜோடி செருப்புகள் மிதந்ததைப் பார்த்து மணியின் தந்தையிடம் தகவல் தெரிவித்தார். அங்கு சென்று பார்த்து அது மணியின் செருப்பு என்பதை உறுதி செய்து திட்டக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு அதிகாரி செல்வராஜ் தலைமையில் தேடுதல் பணியில் ஈடுபட்டு 10.30 மணிக்கு மணியின் உடல் மீட்கப்பட்டது.