ADDED : செப் 04, 2011 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம் : சிறுபாக்கம், மங்களூர் மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த கிராமங்களில் அண்மைக் காலமாக குரங்குகளின் தொல்லை அதிகளவில் காணப்படுகிறது.
எப்போதும் வனப் பகுதியில் மட்டும் காணப்பட்ட குரங்குகள் சில ஆண்டுகளாக கிராமங்களில் முகாமிட்டு தெருத் தெருவாக வலம் வருகின்றன. வீடுகளில் புகுந்து உணவு வகைகள், தின்பண்டங்கள், உணவு தானியங்களை தின்றும், அழித்தும் வருகின்றன. கடைவீதிக்குச் செல்லும் பெண்களிடம் பொருட்களை பிடுங்கியும், பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளின் தட்டுகளை பிடுங்கியும் அச்சுறுத்தி வருகின்றன. குரங்குகளின் தொடர் தொல்லையால் மக்கள் அதிகளவில் அச்சமடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கிராமப் பகுதிகளில் சுற்றித் திரியும் குரங்களை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.