/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஸ்வகர்ம முன்னேற்ற சங்கக் கூட்டம்
/
விஸ்வகர்ம முன்னேற்ற சங்கக் கூட்டம்
ADDED : செப் 04, 2011 11:07 PM
சிதம்பரம் : தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.
மாநிலத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். ஆலோசகர் கோவிந்தராஜ், மாநில இளைஞர் அணிச் செயலர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். ஆன் லைன் வர்த்தகத்தில் தங்கம், வெள்ளி, செப்பு ஆகியவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என பிரதமருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக விளக்கப்பட்டது. தங்கம் விலை ஏற்றத்தால் பொற்கொல்லர்கள் வறுமையில் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்றுத் தொழில் செய்ய மத்திய, மாநில அரசுகள் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க வேண்டும். வங்கிகளில் கடனுதவி அளிக்காத, காலதாமதம் செய்யும் வங்கிகள் முன் உண்ணாவிரதம் இருப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.