ADDED : ஆக 01, 2011 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் தென்கோட்டை வீதி மாரியம்மன் கோவிலின் 49ம் ஆண்டு செடல் திருவிழா நடந்தது.
இதையொட்டி பக்தர்கள் மணிமுக்தா ஆற்றில் நீராடி அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர்.
விருத்தகிரீஸ்வரர் கோவிலின் நான்கு வீதிகளையும் வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவிலில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.