ADDED : ஆக 05, 2011 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : வயலில் ஆடு மேய்ந்த தகராறில் நான்கு பேர் கோர்ட்டில்
சரணடைந்தனர்.புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள்
வீரமணி.
இவரது நிலத்தில் கடந்த 13ம் தேதி அதேபகுதியை சேர்ந்த
முத்துக்கண்ணுவின் ஆடுகள் மேய்ந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட
தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து சரவணன்,
கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி
போலீசார் வழக்கு பதிந்து இருவரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில்
போலீசாரால் தேடப்பட்டு வந்த லட்சுமணன், 30; நடராஜ், 30; குமரவேலு, 29;
துரை, 25; ஆகிய நான்கு பேரும் பரங்கிப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தனர்.