ADDED : ஆக 11, 2011 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே ஓடையில், மினி டெம்போ கவிழ்ந்து, 20 பேர்
படுகாயமடைந்தனர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மேட்டுக் காலனியைச்
சேர்ந்தவர்கள், டாடா ஏஸ் மினி டெம்போவில், பூவனூர் கிராமத்தில் நடந்த துக்க
நிகழ்சியில் பங்கேற்று நேற்று மதியம் வீட்டிற்கு திரும்பினர்.
செம்பளக்குறிச்சி சிறு பாலம் அருகே வந்த போது, டெம்போ, பாலத்தில் இருந்து
ஓடையில் கவிழ்ந்தது.இவ்விபத்தில், 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள்
விருத்தாசலம், கடலூர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.