/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வனத்துறை தேக்கு மரங்கள்ரூ.34 லட்சத்திற்கு ஏலம்
/
வனத்துறை தேக்கு மரங்கள்ரூ.34 லட்சத்திற்கு ஏலம்
ADDED : ஆக 11, 2011 04:09 AM
புவனகிரி:புவனகிரியில் வனத்துறைக்குச் சொந்தமான தேக்கு மரங்கள், 34
லட்சத்து, 7 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.கடலூர் மாவட்டத்தில்
கீரப்பாளையம், லால்பேட்டை ஆகிய இரு இடங்களில், மத்திய தேக்கு மர சேமிப்பு
கிடங்கு உள்ளது. இங்கு சேமிக்கப்படும் தேக்கு மரங்கள் ரகம் வாரியாக
பிரிக்கப்பட்டு, மாதம் ஒரு முறை ஏலம் விடப்படுகிறது.கீரப்பாளையம் சேமிப்பு
கிடங்கில், 75 ரகங்களுக்கு நேற்று ஏலம் விடப்பட்டது.சென்னை தலைமை வன
பாதுகாப்பு அலுவலர் ஆனந்த நாயக் தலைமையில் ஏலம் நடந்தது. விழுப்புரம் மண்டல
வனச்சரக அலுவலர் யோகேஷ், மாவட்ட வன அலுவலர் சுப்ரமணியன் பங்கேற்றனர்.
ஏலத்தில் கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், நாகர்கோவில் மாவட்ட
பகுதிகளிலிருந்து, 30 பேர் பங்கேற்றனர். 75 ரகங்களில், 51 ரகங்கள் மட்டும்,
34 லட்சத்து, 7,ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. மீதமுள்ள, 24
ரகங்களுக்கு ஏலம் கேட்க யாரும் முன்வராததால் ஏலம் விடவில்லை.