/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைவி தீ வைத்து எரிப்பு: கொடூர கணவன் கைது
/
மனைவி தீ வைத்து எரிப்பு: கொடூர கணவன் கைது
ADDED : ஆக 11, 2011 04:09 AM
சிதம்பரம்:சிதம்பரம் அருகே மனைவியை தீ வைத்து எரித்த கொடூர கணவனை போலீசார்
கைது செய்தனர்.சிதம்பரம் அடுத்த லால்புரம் மாரியம்மன் கோவில் தெருவைச்
சேர்ந்தவர் செல்வராஜ், 34; பிட்டர். இவரது மனைவி விஜயலட்சுமி, 30.
இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளன.
செல்வராஜ் தினமும் குடித்து விட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர் விஜயலட்சுமியிடம்
தகராறு செய்து தாக்கியுள்ளார்.பின்னர் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ
வைத்து கொளுத்தி விட்டு, வீட்டை தாழ்ப்பாள் போட்டு விட்டு தப்பியோடினார்.
விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று
கதவை உடைத்து அவரைக் காப்பாற்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்
சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர்
புகழேந்தி வழக்குப்பதிந்து செல்வராஜை கைது செய்தனர்.