ADDED : ஆக 14, 2011 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு
ஒட்டுனர் உரிமம் பெறுவதற்கான முகாம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்
நடந்தது.கல்லூரி புல முதல்வர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
வட்டார
போக்குவரத்து அலுவலர் ஜெயசங்கரன் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கான
பழகுனர் உரிமத்தை ஆய்வாளர் சரவணன் வழங்கினார். இதில் பேராசிரியர்கள்
பாலாஜி, ஜெகதீஸ்வரன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.