/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
6506 மாவட்டத்தில்உள்ளாட்சி பதவிகளின்எண்ணிக்கை கிராமப்பகுதி வாக்காளர்களுக்கு தலா நான்கு ஓட்டு
/
6506 மாவட்டத்தில்உள்ளாட்சி பதவிகளின்எண்ணிக்கை கிராமப்பகுதி வாக்காளர்களுக்கு தலா நான்கு ஓட்டு
6506 மாவட்டத்தில்உள்ளாட்சி பதவிகளின்எண்ணிக்கை கிராமப்பகுதி வாக்காளர்களுக்கு தலா நான்கு ஓட்டு
6506 மாவட்டத்தில்உள்ளாட்சி பதவிகளின்எண்ணிக்கை கிராமப்பகுதி வாக்காளர்களுக்கு தலா நான்கு ஓட்டு
UPDATED : செப் 18, 2011 10:08 PM
ADDED : செப் 18, 2011 09:20 PM
கடலூர்:மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 6,506 பதவிகளில் 6,492 பதவிகளுக்கு தகுதி உள்ள நபர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்ய உள்ளனர்.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஊராட்சி, ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து என மூன்றடுக்கில் நடைபெற உள்ளது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் 29 மாவட்ட பஞ்சாயத்துக்குழு உறுப்பினர்கள், 13 ஒன்றியங்களில் 287 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 683 ஊராட்சி தலைவர்கள் 5,040 ஊராட்சிக்குழு உறுப்பினர்களை மக்கள் நேரடியாக தேர்வு செய்ய உள்ளனர். இதில் ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுயேட்சை சின்னங்களும், ஒன்றியக்குழு மற்றும் மாவட்ட பஞ்சாயத்துக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சின்னங்கள் மற்றும் சுயேட்சை சின்னங்களிலும் போட்டியிட உள்ளனர்.
இதன்படி கிராம பகுதி வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தலா நான்கு ஓட்டுகள் போட வேண்டும்.மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 29 மாவட்டக்குழு உறுப்பினர்களில் ஒரு பெண் உறுப்பினர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராகவும், அதேபோன்று 287 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் இருந்து 13 ஒன்றியங்களுக்கு தலா ஒரு ஒன்றியக்குழு தலைவர்களும் அந்தந்த ஒன்றியங்களை சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதேபோன்று மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கு தலா ஒரு நகர மன்ற தலைவர் மற்றும் 174 கவுன்சிலர்களையும், 16 பேரூராட்சிகளுக்கு தலா ஒரு தலைவர் மற்றும் 258 கவுன்சிலர்களை மீண்டும் மக்களே நேரடியாக தேர்வு செய்ய உள்ளனர். இதற்காக நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதி வாக்காளர்கள் தலா இரண்டு ஓட்டுகள் போட வேண்டும்.மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர்களும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் பெண்களுக்கு 33, ஆதிதிராவிடர்களுக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில்மொத்தம் உள்ள 6,506 பதவிகளில் பொது பிரிவினருக்கு 2,978, பொது பெண்கள் பிரிவிற்கு 1,285, ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கு 1,347, பெண் பிரிவிற்கு 886, பழங்குடியினர் பொது பிரிவிற்கு 8, பெண் பிரிவிற்கு 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.உள்ளாட்சி பழங்குடியினர் ஆதிதிராவிடர் பொதுவானது மொத்தம்
பெண் பொது பெண் பொது பெண் பொது
மாவட்ட சேர்மன் -- -- -- -- 1 -- 1
மாவட்ட கவுன்சிலர் -- -- 4 6 6 13 29
ஒன்றிய சேர்மன் -- -- 2 2 3 6 13
ஒன்றிய கவுன்சிலர் -- -- 35 59 64 129 287
ஊராட்சி தலைவர் -- -- 84 153 146 300 683
ஊராட்சி வார்டு 1 8 730 1083 949 2269 5040
பேரூராட்சி தலைவர் -- -- -- 4 3 9 16
பேரூராட்சி கவுன்சிலர் 1 -- 20 23 65 149 258
நகராட்சி தலைவர் -- -- -- -1 1 3 5
நகராட்சி கவுன்சிலர் -- -- 11 16 47 100 174
மொத்தம் 2 8 886 1347 1285 2978 6506