/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் பகுதி விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை தயார்
/
சிதம்பரம் பகுதி விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை தயார்
சிதம்பரம் பகுதி விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை தயார்
சிதம்பரம் பகுதி விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை தயார்
ADDED : செப் 18, 2011 09:31 PM
சிதம்பரம்:சிதம்பரம் தாலுகா பகுதி விவசாயிகளுக்கு வழங்குவதற்காக உழவர்
பாதுகாப்பு அட்டை தயாராக உள்ளது.தமிழக அரசு சார்பில் கடந்த ஆட்சியில் 60
வயதுக்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டமாக
விவசாய தொழிலாளர்கள் அட்டை வழங்கப்பட்டிருந்தது.
அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பழைய திட்டத்தின் பெயர்
தற்போது உழவர் பாதுகாப்பு அட்டை என பெயர் மாற்றப்பட்டு பயனாளிகளுக்கு புதிய
அட்டை வழங்க அரசு உத்தரவிட்டது.தற்போது கடலூர் மாவட்டத்திற்கு புதிய அட்டை
வந்துள்ளதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் அந்தந்த பகுதி கிராம
நிர்வாக அலுவலர்கள் மூலம் பயனாளிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.
சிதம்பரம் தாலுகாவிற்குட்பட்ட 6 குறுவட்டங்களில் உதவித் தொகை பெறும் 67
ஆயிரத்து 818 அட்டைகள் வழங்கப்பட உள்ளது.அதற்காக நேற்று சிதம்பரம்
ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் உழவர் பாதுகாப்பு அட்டையில் அரசு சின்னம்
பொருத்தும் பணி சமூக நல தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.