/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெட்ரோல் விலை உயர்வுக்குபொதுவுடமை கட்சி கண்டனம்
/
பெட்ரோல் விலை உயர்வுக்குபொதுவுடமை கட்சி கண்டனம்
ADDED : செப் 18, 2011 09:32 PM
சிதம்பரம்:பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழ் தேசப் பொதுவுடமை கட்சி கண்டனம்
தெரிவித்துள்ளது.இதுகுறித்து நகர செயலர் சிவப்பிரகாசம் விடுத்துள்ள
அறிக்கை:
பெட்ரோல் விலையை மத்திய அரசு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தி மக்களை
வாட்டி வதைக்கிறது. தமிழக எண்ணெய் வளத்தை எடுப்பது, கச்சா எண்ணெயை
இறக்குமதி செய்வது போன்ற உரிமைகள் தமிழக அரசுக்கு இருந்தால் பெட்ரோல், காஸ்
போன்ற பொருட்களின் விலையை தமிழகமே தீர்மானிக்கலாம். இதனால் தமிழக
மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யலாம்.எனவே தமிழக பெட்ரோலிய
வளங்களை எடுக்கும் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் உரிமைகளை
இந்திய அரசிடமிருந்து தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும்.உரிமைகளை இந்திய
அரசு தமிழகத்திற்கு வழங்குவதோடு பெட்ரோல் விலை உயர்வை கைவிட
வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.