ADDED : செப் 18, 2011 09:36 PM
புவனகிரி:மேல்புவனகிரி ஒன்றியம் குமூடிமுலை ஊராட்சியில் சுழல் மேம்பாட்டு
பள்ளி சுகாதார கட்டடம் திறப்பு விழா நடந்தது.மேல்புவனகிரி ஒன்றியம்
குமூடிமுலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுழல் மேம்பாட்டு பள்ளி
சுகாதார கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.
ஊராட்சி மன்ற
தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். வேர் எவர் த நீடு இந்தியா தேசிய
இயக்குனர் பரமசிவம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர்
தட்சணாமூர்த்தி வரவேற்றார். சி.எஸ்.டி. தொண்டு நிறுவன செயலாளர் ஆறுமுகம்
திட்ட விளக்கவுரை ஆற்றினார். கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட
இயக்குனர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய பள்ளி சுகாதார
கழிவறை கட்டடத்தை திறந்து வைத்து பேசினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
ஜெயபால், கலையரசி, சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் சதன், ஊராட்சி எழுத்தர்
சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.