/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூவிழந்தநல்லூரில்இலவச மாடு வழங்கும் விழா
/
பூவிழந்தநல்லூரில்இலவச மாடு வழங்கும் விழா
ADDED : செப் 18, 2011 09:36 PM
காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் அடுத்த பூவிழந்தநல்லூரில் இலவச
மாடு வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார்,
முருகுமாறன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறை
இணை இயக்குனர் குருதனபாக்கியம் வரவேற்றார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன்,
தாசில்தார் விஸ்வநாதன், பூவிழந்தநல்லூர் கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட
50 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் சம்பத், செல்வி ராமஜெயம் மாடுகளை வழங்கினர்.
விழாவில் அமைச்சர் சம்பத் பேசுகையில், 'கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 900
மாடுகள் வழங்கப்பட உள்ளன. முதல் மாதம் மாடு பராமரிப்பு செலவிற்காக
பயனாளிகளுக்கும் 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.தொடர்ந்து கால்நடை
பராரிப்பு துறை மூலம் மாடுகளுக்கு தேவையான தடுப்பூசி மற்றும் மருந்துகள்
இலவசமாக வழங்கப்படும்' என்றார்.அமைச்சர் செல்வி ராமயஜெயம் பேசுகையில்,
'மாடுகளுக்கு காப்பீட்டுத் தொகையாக 38 ஆயிரத்து 843 ரூபாய்
செலவிடப்பட்டுள்ளது. பயனாளிகளை நேரடியாக அழைத்துச் சென்று வாங்கிக்
கொடுக்கப்பட்டுள்ளது' என்றார்.விழாவில் அ.தி.மு.க., ஒன்றிய செயலர் துரை
பாண்டியன், வார்டு செயலர் பாலமுருகன், கிராம தலைவர் பத்மநாபன், அசோகன்
மற்றும் பலர் பங்கேற்றனர்.