ADDED : செப் 18, 2011 09:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி:திட்டக்குடியில் நள்ளிரவில் டிரான்ஸ்பார்மரில் லாரி மோதியதால்
மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.திட்டக்குடி மெயின் ரோட்டில் கிருஷ்ணா பேலஸ்
அருகே சாலை வளைவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆலத்தியூர் சிமென்ட்
தொழிற்சாலைக்கு சிமென்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து
டிரான்ஸ்பார்மரில் மோதியது.
இதனால் இப்பகுதி முழுவதும் மின்சப்ளை
துண்டிக்கப்பட்டது.மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த சாலையில் விபத்து
நள்ளிரவில் நடந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.திட்டக்குடி
போலீசார் விசாரித்து வருகின்றனர்.