/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வன்னியர் பாதுகாப்புப் பேரவை துவக்க விழா
/
வன்னியர் பாதுகாப்புப் பேரவை துவக்க விழா
ADDED : செப் 18, 2011 09:39 PM
கடலூர்:வன்னியர் பாதுகாப்புப் பேரவை துவக்க விழா கடலூரில் நேற்று
நடந்தது.வன்னியர் சங்கத்தில் தீவிரமாக பணியாற்றிய ராஜி, பின்னர் ஜனநாயக
முன்னேற்றக்கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வந்தார்.
அதிலிருந்து மீண்டும் பிரிந்து மீண்டும் வன்னியர் பாதுகாப்பு பேரவையை
உருவாக்கியுள்ளார்.
இப்பேரவையின் துவக்க விழா நேற்று கடலூரில் நடந்தது.கலியபெருமாள் தலைமை
தாங்கினார். சேகர், பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். ராமகிருஷ்ணன்
வரவேற்றார். மாநில அமைப்பாளர் ராஜி துவக்கவுரையாற்றினார்.கூட்டத்தில்,
தமிழகத்தில் வன்னியர்களுக்கு 5 அமைச்சர் பதவி வழங்கிய தமிழக முதல்வர் ஜெ.,
விற்கு வன்னியர் பாதுகாப்பு பேரவை நன்றி தெரிவித்துக் கொள்கிறது. வன்னியர்
சமூகத்தின் மூத்த தலைவரான எஸ்.எஸ்.ஆர்., பிறந்த ஊரான சூரப்பன்நாயக்கன்
சாவடி சந்திப்பில் மணி மண்டபம் கட்ட வேண்டும்.வன்னியர்கள் பொது சொத்து
நலவாரியத்தின் செயல்பாடுகளை துரிதமாக செயல்படுத்தவும், வன்னியர்களுக்கு தனி
அமைச்சகம் ஏற்படுத்தி தரவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.பொன்னி ரவி நன்றி கூறினார்.