ADDED : செப் 21, 2011 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த ராயர்பாளையத்தில் உழவர் பாதுகாப்பு அட்டை
வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பண்ருட்டி அடுத்த ராயர்பாளையம் ஊராட்சி
வி.ஏ.ஓ., அலுவலகத்தில் உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை வழங்கும் விழா
நடந்தது.
ஊராட்சித் தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., க்கள் முரளி,
சம்பத் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பண்ருட்டி தாலுகாவில் 78 ஆயிரத்து
472 பேருக்கு உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டு நேற்று
ராயர்பாளையத்தில் 30 பேருக்கு திட்ட தாசில்தார் குமுதம் வழங்கினார். இதில்
வருவாய் ஆய்வாளர் ஆனந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.