/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்25ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
/
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்25ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்25ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்25ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : செப் 21, 2011 11:11 PM
கடலூர்:கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25ம் தேதி காலை 10
மணிக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில்
தனியார் முன்னணி நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்கள்
நிரப்பப்படவுள்ளனர்.அதையொட்டி வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு
வேலைவாய்ப்பு முகாம் கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
நடைபெறவுள்ளது.
பங்கேற்கும் நிறுவனங்களும், ஊதிய விவரமும்:ஜெ.கே., டயர் சிவில் மற்றும்
கம்ப்யூட்டர் தவிர அனைத்து டிப்ளமோ இன் இன்ஜினியரிங், வயது 18 முதல் 22 வரை
இருக்க வேண்டும். மாத ஊதியம் 7,500 ரூபாய்.செயின்ட் கோபைன் கண்ணாடி
தொழிற்சாலை, 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன்
தேர்ச்சி வயது 18 - 20, உதவித்தொகை மாதம் 5,000 ரூபாய். டாடா நிறுவனம் 12ம்
வகுப்பு தேர்ச்சி, வயது 18 - 20 வரை, மாதம் 6,900 ரூபாய். ஏர்டெல்
நிறுவனத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி, ஐ.டி.ஐ., மற்றும்
பாலிடெக்னிக், வயது 18 - 35, கல்வித் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்.
குறைந்த பட்சம் மாதம் 7,000 ரூபாய்.
ஐ.எஸ்.எஸ்.எஸ்.டி.பி., செக்யூரிட்டி சர்வீஸ், அனைத்து கல்வித் தகுதிகளும்,
வயது வரம்பு இல்லை. கல்வித்தகுதிக் கேற்ற ஊதியம். குறைந்தபட்சம் 7,195
ரூபாய்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.