/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார், பண்ருட்டியில் மறியல் : மாற்றுத்திறனாளிகள் கைது
/
கடலுார், பண்ருட்டியில் மறியல் : மாற்றுத்திறனாளிகள் கைது
கடலுார், பண்ருட்டியில் மறியல் : மாற்றுத்திறனாளிகள் கைது
கடலுார், பண்ருட்டியில் மறியல் : மாற்றுத்திறனாளிகள் கைது
ADDED : ஜன 22, 2025 09:40 AM

கடலுார் : கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். அப்துல் ஹமீது, அரி நாராயணன், ரவி, ஜெயலட்சுமி, சிவகாமி முன்னிலை வகித்தனர். ஆந்திராவை போல் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும்.
கடும் ஊனமுற்றோருக்கு ரூ. 10 ஆயிரம் மற்றும் படுத்த படுக்கையாய் உள்ளவர்களுக்கு 15 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலையில் 4 மணி நேரம் வேலை முழு ஊதியத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றத்திறனாளிகள் கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 139 பேரை கடலுார் புதுநகர் போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி
பண்ருட்டியில் அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் சங்கம் சார்பில் பி.டி.ஒ., அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் செய்த பின் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைத் தலைவர் ராசையன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் ஜீவா, ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் துவக்க உரை ஆற்றினார். மறியல் ஈடுபட்ட 35 பெண்கள் உள்ளிட்ட 95 பேரை பண்ருட்டி போலீசார் கைது செய்தனர்.