ADDED : ஆக 01, 2025 02:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: தேசிய அளவிலான டெக்பால் போட்டியில் கடலுார் வீரர்கள் வெற்றி பெற்றனர்.
தேசிய அளவிலான டெக்பால் விளையாட்டுப் போட்டிகள் மகாராஷ்ரா மாநிலம், நாசிக்கில் நடந்தது.
அதில், தமிழ்நாடு அணி சார்பில் கடலுார் வேவ்ஸ் கால்பந்து கழக வீரர்கள் நாவலன், ரக் ஷனா பங்கேற்றனர்.
தனி நபர் விளையாட்டுப்போட்டியில் நாவலன் வெள்ளிப்பதக்கம், இரட்டையர் பிரிவில் ரக் ஷனா வெள்ளி பதக்கம், தனிநபர் பிரிவில் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர்.
நாவலன், ரக் ஷனா மற்றும் பயிற்சியாளர் மகேஷ்குமார் எஸ்.பி., ஜெயக்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.