/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் குழந்தையுடன் கர்ப்பிணி தர்ணா
/
கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் குழந்தையுடன் கர்ப்பிணி தர்ணா
கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் குழந்தையுடன் கர்ப்பிணி தர்ணா
கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் குழந்தையுடன் கர்ப்பிணி தர்ணா
ADDED : பிப் 22, 2024 11:32 PM
கடலுார்: கணவர் துன்புறுத்துவதாக கூறி, கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் குழந்தையுடன், கர்ப்பிணி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
வடலுார் அடுத்த வானதிராயபுரத்தை சேர்ந்தவர் பூவராகவசாமி,30; விவசாயி. இவரது மனைவி காயத்ரி,23; இவர்களுக்கு நிரஞ்சனா, 5; என்ற மகள் உள்ளார். இந்நிலையில் காயத்திரி தற்போது 4 மாதம் கர்ப்பமாகஉள்ளார்.
கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பூவராகவசாமி, காயத்ரியை துன்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து வடலுார் போலீசில் காயத்ரி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனையொட்டி நேற்று காலை கலெக்டரிடம் புகார் தெரிவிக்க காயத்ரி தனது குழந்தையுடன் கடலுாரில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், எஸ்.பி., அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறி அனுப்பினர்.
அதன்பேரில், எஸ்.பி., அலுவலகம் சென்ற காயத்ரி, அங்கு அலுவலகம் முன் தனது குழந்தையுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். சற்று நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
உடன் சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., ராஜாராம், காயத்ரியிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவரை ஆம்புலன்ஸ் மூலம் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் காயத்ரியை நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸ் மூலம் கடலுார் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கவும், காயத்ரி கணவர் பூவராகவசாமி மீது நடவடிக்கை எடுக்க வடலுார் போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டார்.