/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய அளவிலான கபடி போட்டி கடலுார் மாணவிக்கு பதக்கம்
/
தேசிய அளவிலான கபடி போட்டி கடலுார் மாணவிக்கு பதக்கம்
தேசிய அளவிலான கபடி போட்டி கடலுார் மாணவிக்கு பதக்கம்
தேசிய அளவிலான கபடி போட்டி கடலுார் மாணவிக்கு பதக்கம்
ADDED : ஏப் 04, 2025 05:01 AM

கடலுார்: தேசிய அளவிலான கபடி போட்டியில், கடலுாரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி வெண்கல பதக்கம் வென்றார்.
பீகார் மாநிலம், கயாவில் மார்ச் 27 முதல் 30ம் தேதி வரை 34வது தேசிய சப் ஜூனியர் கபடி போட்டி நடந்தது. இதில், பெண்கள் பிரிவில் 10ம் வகுப்பு மாணவி கடலுார் உண்ணாமலை செட்டி சாவடியை சேர்ந்த அனுபிரியா தமிழக அணியில் விளையாடி வெண்கல பதக்கம் வென்றார்.
அவருக்கு, கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த பாராட்டு விழாவில், வள்ளி விலாஸ் ஜுவல்லரி பங்குதாரர் ரமேஷ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், உடற்கல்வி இயக்குனர்கள் அருள்செல்வம், சந்தோஷம், சோபியா, தொண்டமாநத்தம் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் ராமர், ஆயுதப்படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
கடலுார் மாவட்டத்திலிருந்து முதல் முறையாக பெண் வீராங்கனை தேசிய கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்படத்தக்கது.

