/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பென்காக் சிலாட் போட்டியில் கடலுார் மாணவர்களுக்கு தங்கம்
/
பென்காக் சிலாட் போட்டியில் கடலுார் மாணவர்களுக்கு தங்கம்
பென்காக் சிலாட் போட்டியில் கடலுார் மாணவர்களுக்கு தங்கம்
பென்காக் சிலாட் போட்டியில் கடலுார் மாணவர்களுக்கு தங்கம்
ADDED : ஏப் 16, 2025 08:24 PM

கடலுார்: பெங்களூருவில் நடந்த அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பென்காக் சிலாட் போட்டியில், கடலுார் அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பென்காக் சிலாட் போட்டி, பெங்களூரு கிறிஸ்து ஜெயந்தி கல்லுாரியில் கடந்த 14ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் பங்கு பெற்ற பென்காக் சிலாட் அணியின் ரேகு குழுவினர், தங்கப்பதக்கம் வென்றனர்.
தங்கம் வென்ற அணியில் கடலுார் பெரியார் அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் லோகேஸ்வரன், சுதர்சன், ஸ்ரீகாந்த் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பென்காக் சிலாட் சங்க மாநில செயலாளர் மகேஷ்பாபு, மாவட்ட செயலாளர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள், பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.