/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில சாப்ட் டென்னிஸில் கடலுார் அணி அசத்தல்
/
மாநில சாப்ட் டென்னிஸில் கடலுார் அணி அசத்தல்
ADDED : மார் 19, 2025 09:36 PM

கடலுார்; சேலம் மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டியில், மூன்றாம் இடம் பிடித்த கடலுார் மாவட்ட அணியை, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டினார்.
தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் அசோஷியேஷன் சார்பில், சேலம் மாவட்டம் ஓமலுாரில் மாநில அளவிலான சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
இதில் சேலம், வேலுார், கோவை, தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின.
அதில் கடலுார் மாவட்டம் சார்பில் தமிழ்விழி, சத்தியப்பிரியா, காயத்ரி, சரவண பிரியதர்ஷினி, பொன்மணி காயத்ரி, திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்று மூன்றாமிடத்தை பிடித்தனர்.
கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி பெற்று, மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த கடலுார் அணியை, மாவட்ட விளையாட்டுஅலுவலர் மகேஷ்குமார் பாராட்டினார்.
கடலுார் மாவட்ட சாப்ட் டென்னிஸ் சங்கத்தலைவர் கிருஷ்ணசாரதி, பயிற்சியாளர் அப்பாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.