/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் ரயில் விபத்து உண்மை கண்டறியும் குழு ஆய்வு
/
கடலுார் ரயில் விபத்து உண்மை கண்டறியும் குழு ஆய்வு
ADDED : ஜூலை 10, 2025 12:43 PM

கடலுார்: கடலுார் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து உண்மை கண்டறியும் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
கடலுார் அடுத்த செம்மங்குப்பத்தில் நேற்று முன்தினம் காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் இறந்தனர். இது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரி ஸ்ரீகணேஷ் தலைமையிலான ஆறு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு நேற்று மாலை செம்மங்குப்பம் கிராமத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.
பள்ளி வேன் துாக்கி எறியப்பட்ட இடம், கேட் கீப்பர் அறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். பின் அருகிலுள்ள வீடுகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கேட் திறந்திருந்ததா, கேட் கீப்பர் பணியில் இருந்தாரா என்பது உட்பட பல கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து கடலுார் அரசு மருத்துவமனையில் விசாரணையைத் தொடர்ந்த குழுவினர், டிரைவர் சங்கரிடம் விசாரிக்க முற்பட்டனர். அவர் மேல்சிகிச்சைக்கா புதுச்சேரி ஜிப்மர் கொண்டு செல்லப்பட்டது தெரிந்ததும், அவரிம் விசாரிப்பதற்காக அங்கு புறப்பட்டு சென்றனர்.