/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் வள்ளி விலாஸ் ஜூவல்லரி புதிய பொலிவுடன் விற்பனை துவக்கம்
/
கடலுார் வள்ளி விலாஸ் ஜூவல்லரி புதிய பொலிவுடன் விற்பனை துவக்கம்
கடலுார் வள்ளி விலாஸ் ஜூவல்லரி புதிய பொலிவுடன் விற்பனை துவக்கம்
கடலுார் வள்ளி விலாஸ் ஜூவல்லரி புதிய பொலிவுடன் விற்பனை துவக்கம்
ADDED : பிப் 04, 2025 06:26 AM

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் புதுப்பொலிவுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள, வீரப்ப செட்டியார் அண்ட் சன் வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் விற்பனை துவக்க விழா நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சுப்பராய செட்டி தெருவில் வீரப்ப செட்டியார் அண்ட் சன் வள்ளி விலாஸ் ஜூவல்லரி இயங்கி வருகிறது. பாரம்பரியமிக்க இந்த ஜூவல்லரி, ''ஏசி' வசதியுடன் அதே முகவரியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
புதுப்பொலிவு பெற்றுள்ள வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் விற்பனை துவக்க விழா நடந்தது. நிர்வாகி முரளி, விற்பனையை துவக்கி வைத்தார். உமா மகேஸ்வரி, கவுசிக் ராம் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த ஜூவல்லரியில், பி.டி., சீல் உத்தரவாதத்துடன் லேட்டஸ்ட் டிசைனில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் விற்பனைக்கு அணிவகுத்துள்ளன. நிகழ்ச்சியில், சுப ஸ்ரீ வள்ளி விலாஸ் கணேசன், ரவிசங்கர், தீபக், ஸ்ரீ வள்ளி விலாஸ் பங்குதாரர்கள் பாலு, சீனுவாசன், ரமேஷ், நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் சிங்காரவேல், வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், மால் இயக்குனர் சரவணன், எலைட் கண்ஸ்ட்ரக் ஷன் பொறியாளர் சந்தானகிருஷ்ணன், பண்ருட்டி வள்ளி விலாஸ் சரவணன் மற்றும் தொழிலதிபர்கள், நகைக்கடை அதிபர்கள், ஆடிட்டர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.