/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத் திறனாளிக்கான மருத்துவ பரிசோதனை முகாம்
/
மாற்றுத் திறனாளிக்கான மருத்துவ பரிசோதனை முகாம்
ADDED : செப் 04, 2011 01:50 AM
கடலூர்:அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.கடலூரில், அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த முகாமை சி.இ.ஓ., அமுதவல்லி துவக்கி வைத்தார்.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட கூடுதல் ஒருங்கிணைப்பாளர் செல்வம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆஷா கிறிஸ்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இணை இயக்குனர் மனோகரன், டாக்டர்கள் சத்தியமூர்த்தி (மனநலம்), அசோக்பாஸ்கர் (கண்), ராமலிங்கம் (எலும்பு), சரவணன் (காது) கொண்ட குழுவினர் முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை பரிசோதித்து அடையாள அட்டை வழங்கினர்.ஏற்பாடுகளை முருகானந்தம், சிறப்பாசிரியர்கள் பவாணி, ரோகிணி, கார்த்திகேயன், பிரபு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.