/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சைபர் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
/
சைபர் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 27, 2025 02:47 AM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ரோட்டரி கிளப், எஸ்.பி.ஜி. வித்யாலயா சி.பி.எஸ்.சி., பள்ளி மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி. வித்யாலயா பள்ளியில் நடந்த முகாமிற்கு ரோட்டரி கிளப் தலைவர் குருராஜன் தலைமை தாங்கினார். முன் னாள் தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பினே ஷ்ஜான் வரவேற்றார்.
மாவட்ட சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா , சமூக வலைதளங்களில் சைபர் குற்றங்கள் எவ்வாறு நடக்கிறது என்றும், அதில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது குறித்தும் பேசினார்.
நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் மாவட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் தலைவர் ஜாகீர் உசேன், உறுப்பினர்கள் மனோகர், ஜெகன், சக்தி, வள்ளிநாயகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.