/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
/
சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : பிப் 04, 2024 03:29 AM

கடலுார் : கடலுார் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பது குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் நடந்த ஊர்வலத்தை, எஸ்.பி., ராஜாராம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பின், சைபர் கிரைம் விழிப்புணர்வு பாடல் ஒளிநாடாவை எஸ்.பி., வெளியிட்டார். இதில், சைபர் கிரைம் சம்பந்தமாக பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், கடவுச்சொல் தொடர்பான குற்றங்கள் குறித்தும், போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி தொடர்பான லிங்கில் செல்ல கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், 1930 உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
அப்போது, ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார், டி.எஸ்.பி., பிரபு, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா, பேராசிரியர் சந்தானராஜ், சைபர் கிரைம் போலீசார், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.