ADDED : மார் 18, 2024 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் :  கடலுார் மாவட்ட போலீசார் சார்பில், பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புனித அண்ணாள் சி.பி.எஸ்.சி., பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமை தாங்கி, பேசினார். இதில் மாணவிகள், ஆசிரியர்கள் என 150 பேர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் இணைய வழி குற்றங்கள், மொபைல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள், அவற்றிலிருந்து கவனமாக இருக்க வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

